Saturday, 21 September 2013


உயிர் என்பது ஒரு நுண்ணிய ஆற்றல் துகள், தற்சுழற்சி விரைவு கொண்டது, தன்னை தானே சுற்றிக்கொண்டு உடல் முழுவதும் ஓடிக்கொண்டிருப்பது. நம் உடலில் கோடானு கோடி உயிர்த்துகள்கள் தற்சுழற்சியுடன் ஒரு தொடராக கோவையாக இயங்கிக் கொண்டிருக்கிறது, அதைச் சுக்குமசரிரம் (astral body) என்று சொல்கிறோம். அந்தச் சுக்குமசரிரம் உடலில் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது, ஒவ்வொரு உயிர்த் துகளிலிருந்தும் தற்சுழலால் ஓர் அலை உண்டாகிறது. உயிர் துகள்கள் அத்தனையும் சேர்ந்து அளிக்கும் அந்த அலைப்பெருக்கத்தை ஜீவகாந்தம்(Bio-Magnetism)” என்று சொல்கிறோம். அந்த ஜீவகாந்தமே உடலையும், மனதையும் நடத்துகிறது. 

உயிர் என்ற தத்துவம் சித்த மருத்துவம், ஆயூர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது, ஆனால் நவீன அறிவியலில் உயிர் என்ற தத்துவம் ஒத்துக் கொள்ளப்படவில்லை, காரணம் அவர்களின் அறிவியல் கருவிகளுக்கு உயிர் அகப்படவில்லை. இதற்க்கு என்ன காரணம்?

எந்த ஒரு அறிவியல் கருவியாக இருந்தாலும் அதனின் அளக்கும்/ ஆராயும் திறனுக்கு ஒரு எல்லை உண்டு, உதாரணம்: நாம் அன்றாடம் உபயோகிக்கும் 1 அடி அளவுகோலை எடுத்துக்கொள்வோம், அந்த அளவுகோலில் குறைந்த பட்ச நுண்ணிய அளவு 1 mm ஆகும். இப்பொழுது நீங்கள் அளக்கவேண்டிய பொருள் 1mm க்கு குறைவாக இருப்பின், இந்த அளவுகோலை கொண்டு அதை அளக்கமுடியாது, 1 mm விட நுண்ணிய அளவுள்ள அளவுகோல் தேவைப்படுகிறது.

அதாவது அளக்கப்படும்/ஆராயப்படும்  பொருளை விட அதனை அளக்க/ஆராயப் பயன்படும் கருவி நுண்ணிய அளவில் இயங்கக்கூடியதாக இருக்கவேண்டும்.

உயிர் என்னும் பொருளோ மிகவும் நுண்ணிய அளவில் இயங்கக்கூடிய, அளவிலே மிக மிக சிறியதுமான ஒரு பொருள். அதை விட ஒரு சிறிய/நுண்ணிய பொருள் இந்த பிரபஞ்சத்தில் கிடையாது. 

 நம் முன்னோர்கள் இந்த பிரபஞ்சத்தை 5 பௌதிக பிரிவுகளாக பிரித்தனர். அவை கெட்டிபொருள்(solid), நீர் (liquid), நெருப்பு (heavy air or fire), காற்று (air) மற்றும் விண் துகள் (infinitesimal energy particle). இந்த 5 பூதங்களும்(elements) உயிரினங்களில் ஒன்றோடு ஒன்று ஒத்தும் உதவியும் இயங்கி கொண்டிருக்கிறது என்பதையும் தெளிவாக உணர்ந்தனர்.

பருவுடல் கேட்டிப்போருளாகவும், இரத்தம் மற்றும் இதர திரவியங்கள் நீராகவும், வெப்ப ஓட்டம் நெருப்பாகவும், சுவாச ஓட்டம் காற்றாகவும், உயிர் ஓட்டம் விண்ணாகவும் இயங்கிக்கொண்டிருக்கிறது. விண் என்ற பூதமே உயிரினங்களில் உயிராக மதிக்கப்படுகிறது.

இந்த விண்ணிற்கு பரமாணு (பரம் + அணு) என்ற இன்னொரு பெயரும் உண்டு. அணு என்றால் மிகவும் சிறிய/நுண்ணிய என்று பொருள், பரமாணு என்றால் அதை விட ஒரு சிறிய/நுண்ணிய பொருள் கிடையாது என்று பொருள். 

இந்த பரமாணுவை அளக்கவேண்டும் என்றால் அதைவிட சிறியதுமான, நுண்ணிய அளவில் இயங்கக்கூடிய ஒரு பொருளை அறிவியல் கருவி உபயோகிக்கவேண்டும். ஆனால் அப்படி ஒரு பொருள் இந்த பிரபஞ்சத்தில் கிடையாது. ஆகையால் எந்த ஒரு அறிவியல் கருவிக்கும் பரமாணு அகப்படாது.

 எந்த வித அறிவியல் கருவியும் இல்லாமல்  நம் முன்னோர்கள் உயிரைப் பற்றி எப்படி அறிந்தனர்? 

நம் முன்னோர்கள் மனதை மிகவும் அமைதி நிலையில் வைக்கும் வல்லமை படைத்தவர்கள், அந்த அமைதியில் எழும் உள்ளுணர்வுகளே (intuition)” பல்வேறு தத்துவங்களாக உருவாகி இன்றும் நன்மை பயதுக்கொண்டிருக்கிறது.

மனம் ஒன்றை உணர வேண்டுமானால் அதற்கு தகுந்த மன அலைக்கு (Mind frequency) மனம் வர வேண்டும், அப்பொழுதுதான் அதை உணர முடியும். உதாரணம்: உங்கள் இதயம் எப்பொழுதும் துடித்துக் கொண்டு இருக்கிறது, ஆனால் இந்த கட்டுரையை  நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் பொழுது அந்த துடிப்பை நீங்கள் உணர்ந்திருக்க மாட்டிர்கள், காரணம் உங்கள் மனம் அந்த துடிப்பை உணரும் அலையில் இல்லை. இப்பொழுது சற்று கண்ணை மூடி இதயத்துடிப்பின் மீது மனதை செலுத்துங்கள், உங்களால் கண்டிப்பாக அந்த துடிப்பை உணர முடியும்.

இதே போன்று உங்களின் மன அலை உயிரின் இயக்கத்தை உணரும் அளவிற்கு நுண்ணிய நிலைக்கு வருமேயானால், உங்களால் கண்டிப்பாக உயிரையும் உணர முடியும். ஆனால் இது சாதாரண மக்களுக்கு சற்று அரிதான செயலே, காரணம் பழக்கமின்மை. சாதாரணமாக மனத மனம் 14 Hz to 40 Hz  இல் இயங்கிக்கொண்டிருக்கும், இந்த நிலையை பீட்டா (beta state) என்று சொல்வார்கள், இந்த நிலையில் மனம் புறப் போருட்களை உணர்வதிலும், உலகவாழ்க்கையில் ஈடுபடுவதிலும் எல்லை கட்டி கொண்டிருக்கும். அதற்க்கு மேல் பெரிதாக எந்த ஒன்றையும் உணரமுடியாது.

ஆனால் உயிரின் மேலேயே மனதை வைத்து செய்யும் குண்டலினி யோகதியான பயிற்சியின் மூலம், மன அலைச்சுழலை ஆல்பா(alpha stae: 8 Hz to 13 Hz), தீட்டா (Theta State: 4 Hz to 7 Hz), டெல்டா (delta state: 1 Hz to 3 Hz) நிலைகளுக்கு கொண்டு செல்ல முடியும். இந்த நுண்ணிய நிலையில் மனதை வைத்து பழக்கும் பொழுது, உடலில் மற்றும் பிரபஞ்சத்தில் நடக்கும் நுண்ணிய இயக்கங்களை மனதால் உணரமுடியும்.

 நம் சித்தர்கள் குண்டலினி யோகத்தில் தலை சிறந்தவர்கள், அவர்கள் மனதை வேண்டிய அலைச்சுழலுக்கு கொண்டு வந்து பிரபஞ்சத்தில் உள்ள எந்த ஒன்றையும் தெளிவாக உணர்ந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள். உயிருக்கு இன்னொரு பெயரும் உண்டு சித்து”, சித்து என்றால் மிகவும் சிறிய என்று பொருள், இந்த சித்துவை உடலிலும் பிரபஞ்சத்திலும் உணர்ந்ததாலேயே அவர்களை சித்தர்கள் என்றும் அழைக்கிறோம்.

 இந்த கட்டுரையில் உயிரையும், மனதையும் தனித்தனியாக பேசினோம் ஆனால் அவை இரண்டும் வேறு வேறு அல்ல, உயிரின் படர்கை நிலையே மனமாக உள்ளது, அதாவது உயிரில் இருந்து எழும் அலையின் ஒரு பகுதியே மனமாகவும் இயிங்கிக்கொண்டு இருக்கிறது, இது பற்றிய மேலும் தகவுலுக்கு வேதாத்திரி மகரிஷியின் புத்தகங்களை வாங்கி படிக்கவும்.

http://shop.india.vethathiri.edu.in/products/40--.aspx